இலங்கையில் மனித உரிமைக்குழு- ஐ.நா யோசனையை நிராகரித்தார் ராஜபக்சே

இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான போரின் போது மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலைகள் ஆதாரப் பூர்வமாக வீடியோ மூலமாக வெளியாகின. ஆனால் அனைத்துப் புகார்களையும் ஒரேயடியாக மறுத்து விட்டது இலங்கை அரசு.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை படையினரின் போர்க்குற்றம் தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும் என்று ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான ஆய்வு குழு ஒன்றை அமைக்கும் திட்டத்தை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் முன் வைத்தார்.
ஆனால் பான் யோசனையை மகி்ந்தா ராஜபக்சே நிராகரித்து விட்டார். இதுகுறித்து தன்னுடன் தொலைபேசியில் பேசிய பான் கி மூனிடம் பேசிய ராஜபக்சே,
'இதுபோன்ற குழுவை அமைப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போன்றதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து விட்டது. விடுதலை புலிகளை முற்றிலும் ஒழித்துக் கட்டியாகி விட்டது.
உலகின் மிக மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆயுத பலத்துடன் இலங்கை ராணுவம் அடக்கி ஒடுக்கிவிட்டது. தற்போது அது முடிந்துபோன விவகாரம்.
விடுதலைப் புலிகளின் அனுதாபிகளும், இலங்கை அரசுக்கு எதிராக செயல்படும் சில அமைப்புகளும் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து பேசி வருகிறார்கள்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றியும், அமெரிக்க வெளியுறவுத் துறை கூறிய புகார்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்த ஏற்கனவே சிறப்பு கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
இலங்கையை விட மோசமான சூழல்கள் நிலவும் மற்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள் அமைக்காத நிலையில், இலங்கையில் மட்டும் பிரத்தியேகமாக விசாரணை குழு அமைப்பது பொருத்தமற்றதாகவே கருத முடிகிறது' என்று கூறி விட்டார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து ஐ.நாவுக்கு விளக்கமாக கடிதம் எழுத உள்ளதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சின் மூலம் ஐ.நாவுடன் பகிரங்கமான மோதலுக்கும் தான் தயார் என்பதை ராஜபக்சே எடுத்துக் காட்டியிருப்பதாக தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications