தூத்துக்குடியில் சிலை திருட்டு - புகார் கொடுத்தவர் கைது
தூத்துக்குடி: ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பமாக புகார் கூறிய தலைமை ஆசிரியரே கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆசீர்ராஜாசிங். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
ஆறுமுகநேரியை சேர்ந்த குமார், பார்த்தசாரதி ஆகிய இருவரும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நடராஜர் மற்றும் ஒன்றரை அடி உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகிய 2 ஐம்பொன் சாமி சிலைகளை திருடி சென்று விட்டதாக புகார் கூறினார்.
இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஐம்பொன் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆசீர் ராஜாசிங்கிடம் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது அவருக்கு சிலைகள் எப்படி கிடைத்தது என விசாரித்தார்.
அதற்கு அவர் முதலில் தனது சகோதரர் கொடுத்தாகவும், பின்னர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான சிலைகளை தான் கோர்ட் உத்தரவுபடி பாதுகாத்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தன்னிடம் அந்த சிலைகள் வந்ததற்கான ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைக்கவில்லை. அவரது முரண்பட்ட பதில்களால் டிஐஜிக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. உடனே அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆசிர் ராஜாசிங் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications