கேரள ஐடி துறையில் 1 லட்சம் வேலைகள்!-அமைச்சர்
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாக்கவிருப்பதாக அம்மாநில நிதி அமைச்சர் டிஎம் தாமஸ் ஐஸக் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில பட்ஜெட் அறிவிப்பில் இதனைத் தெரிவித்தார் அமைச்சர் தாமஸ்.
மேலும் அவர் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டம் இரு பகுதிகளாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கென முதல் தவணையாக ரூ 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்" அறிவித்தார்.
கொச்சின் விமான நிலையம் எப்படி அரசு - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுகிறதோ, அதே பாணியில் கண்ணூரிலும் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் தாமஸ் ஐஸக் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் 26 சதவிகிதம் அரசின் பங்கு இருக்குமாம்.
மேலும் கேரளாவின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாவுக்கு 7.5 முதல் 12.5 சதவிகிதம் என குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 10 முதல் 15 சதவிகிதமாக, இடத்துக்கு ஏற்ப வசூலிக்கப்பட்டு வந்தது.
ஒயின் மீதான வரி மட்டும் 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மதுபானத்தின் மீது 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications