ரஞ்சிதாவுடன் ஆபாச வீடியோ - முன்ஜாமீனுக்கு முனையும் நித்தியானந்தா
சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள சுவாமி நித்தியானந்தா, முன்ஜாமீன் கோர தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
செக்ஸ் டேப் வெளியானதைத் தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் சென்னை போலீஸார் நித்தியானந்தா மீது 6 வழக்குகளைப் பதிவு செய்தனர். அவற்றில் ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா அந்தரங்கமாக இருந்த நேரத்தை வீடியோவில் பதிவு செய்வதரான அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தா தன்னை சாமியார் மிரட்டியதாக கொடுத்த புகாரை மட்டும் தம் வசம் வைத்துக் கொண்டு மற்ற ஐந்து புகார்களையும் கர்நாடக போலீஸாருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது சென்னை காவல்துறை.
இந்த நிலையில்தான் நேற்று நித்தியானந்தாவின் விளக்க வீடியோ அறிக்கையை அவரது வக்கீல், ஸ்ரீதர் வெளியிட்டார். நித்தியானந்தா மடத்தின் இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை. கோர்ட்டுக்கு தெரிவித்தவுடன் முன் ஜாமீன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்யானந்தா எங்கிருந்து வீடியோ காட்சி கேசட்டை அனுப்பி வைத்தார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரை கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உரிய சட்ட பாதுகாப்புகளோடுதான் இனி வெளியே வருவார்.
அவர் கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. அவர் கடைசியாக வாரனாசியில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது பேச்சு அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் பாபாஜி என்ற தன்னுடைய குருஜியுடன்தான் இருக்கிறார்.
தற்போது புகார் கொடுத்துள்ள லெனின் சேலம் ஆத்தூரிலிருந்து, சென்னைக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் புகார் கொடுக்க வேண்டிய இடம் கர்நாடக மாநில போலீசாகும்.
முதலில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை போலீசார் கூறினார்கள். இப்போது பாதிக்கப்பட்ட பெண் யாரும் புகார் கொடுக்காமல் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. நாங்கள் அதை சட்டரீதியாக சந்திப்போம். போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு பின்னணி உள்ளது என்பது மட்டும் இப்போது தெளிவாக தெரிகிறது. விரைவில் அவை வெளிச்சத்துக்கு வரும் என்றார் ஸ்ரீதர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications