'குடி'மகனிடம் சரமாரியாக குத்து வாங்கிய ஏட்டு
மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபர் முன்னால் சென்று கொண்டிருந்த 2 பேரை இடித்து தள்ளிவிட்டு பைக்கை நிறுத்தாமல் சென்றார்.
உடனே போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பைக்கை மடக்கி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மார்த்தாண்டம் நந்தன்காட்டை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் குடிபோதையில் பைக்கை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த வாலிபரை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மது குடித்ததை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைக்காக ஏட்டுவிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். அப்போது ஆத்திரமடைந்த முருகன் ஏட்டு ஜான்ரோசை தாக்கினார்.
அவர் நிலை தடுமாறியதைப் பயன்படுத்தி தப்பியோட முயற்சித்தார். ஆனால் சுதாரித்த ஏட்டு பிடித்து நிறுத்தினார். அப்போது மீண்டும் ஏட்டுவை முருகன் தாக்கினார். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த ஏட்டை சரமாரியாகத் தாக்கினார் குடிகார முருகன்.
குடிமகனின் தாக்குதலுக்கு ஆளான ஏட்டு ஜான்ரோஸ் காயமடைந்தார். குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் போதை வாலிபர் முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications