தமிழகத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள்!
மதுரை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போல, கோவில் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக கிராமப் பகுதிகிளில் உள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் கூறினார்.
இன்று மதுரையில் நிருபர்களை சந்தித்த சுதர்ஷன் மேலும் கூறுகையில், 'தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 கோவில்கள் உள்ளன.
தினமும் ஒருவேளை பூஜை செய்வது கூட இயலாத நிலையில் உள்ள கோயிலகளுக்கு பூஜை நடத்துவதற்காக 'ஒரு கால பூஜை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் நிதி திரட்டப்பட்டது.
இதில் பொதுமக்களின் நன்கொடையாக ரூ.2500ம் அறநிலையத்துறை ரூ.22,500 ம் ஆக மொத்தம் 25 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட கோவிலின் பெயரில் வங்கியில் நிரந்தர முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக்கொண்டு ஒரு கால பூஜை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிதியில் இருந்து, நலிந்த நிலையில் உள்ள அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் படி சுமார் 10 ஆயிரம் அர்ச்சகர்கள் அல்லது பூசாரிகள் இலவச சைக்கிள் பெறுவார்கள்' என்றார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications