ஓமந்தூரார் தோட்டத்துக்கு கருணாநிதியின் நள்ளிரவு 'விசிட்'!
சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உருவாகி வரும் சட்டசபை புதிய கட்டித்தை முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கான புதிய கட்டிடம் துரித கதியில் தயாராகி வருகிறது. வரும் 13ம் தேதி இக்கட்டிடம் திறப்பு விழா காண உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பல முக்கிய தலைவர்கள் முன்னிலையில் புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
முதல்வர் கருணாநிதியும் கட்டிடப் பணிகளை கிட்டத்தட்ட தினந்தோறும் வந்து பார்த்துவிட்டு செல்வதை கடந்த இரு மாதங்களாக வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
கட்டிடத்தின் ஒவ்வொரு வேலையிலும் தனக்கு தெரிந்த குறைபாடுகள், திருத்தங்களை சொல்லி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற கருணாநிதி, அங்கு 3 வெவ்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இரவு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசி முடிக்கும் போது இரவு மணி 10.15.
அதன் பின்னர் கருணாநிதி சென்னை வந்து சேர்ந்தபோது மணி 12.45ஐ தொட்டுவிட்டது.
சென்னைக்குள் நுழைந்த உடனேயே வண்டியை நேராக ஓமந்தூரார் தோட்ட வளாகத்துக்கு விடச் சொன்னார் கருணாநிதி.
தன்னுடன் ஸ்டாலினையும் அழைத்துக் கொண்டு, இன்றைய தினத்தில் குறிப்பிட்ட பணிகள் முடிந்துவிட்டனவா என கருணாநிதி சென்று பார்வையிட்டுள்ளார்.
நடுநிசியில் ஒரு மணிக்கு முதல்வர் வந்து பார்வையிடுவதை அறிந்த அங்கிருந்த பணியாளர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications