காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை: ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது குறித்து ராஜ்யசபாவில் உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,
'காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
கழிவுகளை சுத்திகரிப்பதற்கான ஆலை மற்றும் மறு சுழற்சிக்கான அடிப்படையிலான கழிவுகள் சுத்திகரிப்பு போன்ற வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் கொண்டுள்ளன.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் தோட்ட வேலை, நீர்ப் பாசனம் போன்ற பணிகளுக்கு மறு சுழற்சி செய்யப்படுகின்றன அல்லது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த தர நிர்ணய அளவுகளில் உள்ளூர் நீர் நிலைகளில் விடப்படுகின்றன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி, கர்நாடகத்தில் எந்த தொழிற்சாலையும் தனது கழிவுகளை கழிவுகளை காவிரி ஆற்றில் கலக்க விடுவதில்லை' என்றார்.
மேலும், 'நாடு முழுவதும் 43 தொழில் பகுதிகள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. அவற்றுள், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர், கடலூர், மணலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு பகுதிகளும் அடங்கும்' என்று குறிப்பிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications