பேருந்து ஓட்டும்போது செல்போன் - வேலூரில் அரசு டிரைவர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் மூன்று பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தார்கள். இரண்டு பேருந்திலும் ஓட்டுநர்கள் செல்போனில் பேசிய படியே ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது.
அரசு பஸ்கள் உட்பட வாகனங்களில் ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அரசாங்க உத்தரவு அமலில் உள்ளது. எனினும் பல டிரைவர்கள் இதை மீறி செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து நேற்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்து மேலாளர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையம் காட்பாடி, பாகாயம் உட்பட பல இடங்களில் பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது 11 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் வைத்திருந்த 4 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசு பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போனில் பேசினால் அல்லது வைத்திருந்தாலோ 94454 56027 அல்லது 94454 56028 என்ற மொபைல் எண்களில் புகார் செய்யலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications