புதிய சட்டசபையில் கருணாநிதி படத்தை வைக்க ஜெ. எதிர்ப்பு

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி வருபவர் என்று அவரை வருணித்து, இவ்வாறு இந்த மாமன்றத்திற்கு சிறப்பு சேர்த்து வரும் கருணாநிதியின் உருவப்படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது சட்டமன்ற மரபுகளுக்கு முரணான செயல்.
மிகச் சிறந்த தேசத் தலைவர்கள் அல்லது நாடாளுமன்றவாதிகளின் சிலைகளையோ, திருவுருவப் படங்களையோ நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றால், சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களை அமைப்பதற்கென்று மக்களவை சபாநாயகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அந்தக் குழுதான் யார் யாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். இது நாடாளுமன்ற நடைமுறை.
எம்.ஜி.ஆரின் உருவப்படம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று அதிமுக மட்டுமல்லாமல், அப்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் விரும்பியது.
அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், சிங்காரம் ஆகியோர் இதனை வலியுறுத்தி சட்டமன்றத்திலேயே பேசினர்.
எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறந்து வைக்க அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். உருவப்படம் இந்த மாமன்றத்திலே திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் இன்று என்ன நிலைமை? யாரும் கோரிக்கை விடாத சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலையும் பெறாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெறாமல், தோழமை கட்சிகளையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுப்பதுதான் ஜனநாயக நெறிமுறையா? இந்த முடிவு எடுக்கப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறியுள்ளார்.
சி.ஆர்.சரஸ்வதிக்குப் புதுப் பதவி:
இதற்கிடையே, அதிமுக மகளிர் அணியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு துணை செயலாளர் பதவி வழங்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் தலைமைக் கழகப் பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இது போல் தலைமைக் கழகப் பேச்சாளர் திருப்பூர் விசாலாட்சியும் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications