உஸ்மானியா பல்கலை. மாணவர் தற்கொலை- ஹைதராபாத்தில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் ஹைதராபாத்தில் பெரும் பதட்டம் காணப்படுகிறது.
அவரது பெயர் சாய்குமார். பி.டெக் படித்து வந்தார். இன்று காலை அவர் தனது விடுதி அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அறைக்குத் திரும்பிய மாணவர்கள் சாய்குமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
சாய்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தெலுங்கானாவுக்காக தனது உயிரைத் தியாகம் செய்வதாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்க வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications