பென்னாகரம்- வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது
தர்மபுரி: பெண்ணாகரம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 3ம் தேதி தொடங்கியது.
திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதுவரை 17 சுயேச்சைகள் உள்பட 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்றுடன் மனு தாக்கல் முடிவுக்கு வந்துவிட்டது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். மனுக்களை வாபஸ் பெற 13ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்தத் தொகுதியில் திமுக, பாமக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இடைத் தேர்தல் நடக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டதால் அதிமுகவினரிடையே வேகம் இல்லை. அவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தெரிகிறது. அதன் பின்னர் அதிமுக தரப்பு சுறுசுறுப்பாக வாய்ப்புள்ளது.
தேமுதிகவைப் பொறுத்தவரை கடந்த இடைத் தேர்தல்களில் டெபாசிட்டே போய்விட்டதால், இம்முறையும் அப்படி நடந்துவிடாமல் இருக்க கடுமையான பிரயத்தனம் செய்து கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications