முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன நாள் விழா- கருணாநிதி வாழ்த்து
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன நாள் விழாவையொட்டி அக்கட்சியினருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
தந்தை பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரிய பெருந்தகையாளர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சுதந்திர இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10 ஆம் நாள் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா, 10.3.2010 அன்று நெல்லை மாநகரில் நிகழ்வ தறிந்து மகிழ்கிறேன்.
இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்றபோது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதே மில்லத் அதனைக் கடுமையாக எதிர்த்ததுடன், இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டபோது, வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான என தருமைத்தாய் மொழியாம் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம் என ஆணித்தரமாக முழங்கினார்.
தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் தமிழக அரசின் சார்பில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் வேளையில் நினைவுகூர்ந்து அன்னாரைப் போற்றுவதுடன் அவர் நிறுவிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா எழுச்சியுடன் நிகழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications