மகளிர் மசோதா: அரைக்கிணறுதான் தாண்டியுள்ளோம்-விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இம்மாதம் 8 ந் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி விடுத்த வாழ்த்து செய்தியில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்திலாவது நிறைவேற வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அதேபோல இந்த மசோதா டெல்லி மேல் சபையில் பெருவாரியான வாக்குகளை பெற்று நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆனால் இது தற்காலிகமாக அரை கிணறு தாண்டியதாக ஆகி விடக்கூடாது. லோக்சபாவிலும் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
'பிரச்னைகளை தீர்க்கக்கூடியவர் விஜயகாந்த் மட்டுமே'!:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு, காவிரி, விலைவாசி, மீனவர் பிரச்னை போன்ற எல்லாவற்றுக்கு தீர்வுக் காணக்கூடியவர் விஜயகாந்த் மட்டுமே என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுளளார்.
திருப்பூர் ஒன்றிய தேமுதிக சார்பில் பெருமாநல்லூரில் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை ஏற்றியுள்ளது. இதனால் மீண்டும் விலை வாசி உயரத்தான் செய்யும். பால் மற்றும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
கோவையில் வண்ண வண்ணமாக பேருந்துகளை விட்டு கட்டணத்தை ஏற்றி விட்டனர். கேட்டால் சொகுசு பஸ் என்கிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களுக்காக வாழக் கூடியவர். அரசியலுக்கு வரும் முன்பே பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவர் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்.
இதுவரை தமிழகத்தில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைப் பெரியார், காவிரி நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
கடலில் மீன்பிடிக்க முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணக்கூடியவர் விஜயகாந்த் மட்டுமே என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications