மதுரை அருகே பள்ளி வேன் கவிழந்து 15 குழந்தைகள் காயம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 15 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
மதுரை அடுத்து திருமங்கலத்தில் உள்ளது அல் அமீன் பள்ளி. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
அரசப்பட்டி என்ற இடத்தில் அந்த வேன் எதிர்பாரத விதமாக கவிழந்தது. இதில் வேனில் இருந்த 15 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த குழந்தைகள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.
இந்த விபத்து குறித்து டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications