பிபிஓ அலுவலக பெண் கொலை-'டீம் லீடர்' கைது
நொய்டா: காதல் விவகாரத்தால் உடன் பணி புரியும் பெண்ணை கொலை செய்த பிபிஓ ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நொய்டாவில் உள்ள ஸ்பார்ஷ் இன்டல்நெட் கால் சென்டரில் வேலை பார்த்து வந்தவர் 23 வயதான பூஜா பாட்டியா.
கடந்த 1ம் தேதி ஹோலி கொண்டாடுவதற்காக தோழிகளுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பூஜாவை அவரின் அலுவலக டீம் லீடர் பால்ஜீத் சிங் கடத்திச் சென்றுவிட்டதாக கடந்த 3ம் தேதி போலீசில் புகார் கொடுத்தனர் பூஜாவின் பெற்றோர்.
பால்ஜீத் சிங்கிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து பூஜாவை கொலை செய்ததை பால்ஜீத் சிங் ஒப்புக்கொண்டார்.
பூஜாவை கொன்று உடலை பாரிதாபாத்தில் ஒரு மறைவிடத்தில் போட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பூஜாவுக்கும், பால்ஜீத் சிங்குக்கும் இடையிலான காதல் விவகாரமே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பாரிதாபாத்தில் உள்ள நீர்நிலையில் இருந்து பூஜாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications