போலி சாமியார்களுக்கான எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம்-கி.வீரமணி

நித்யானந்தா உள்பட போலி சாமியார்களை கைது செய்யக்கோரி சென்னையில் இன்று கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில்,
ஆன்மீகத்தை பரப்புகிறேன் என்ற போர்வையில் காவி உடை அணிந்து தியானம் பயிற்சி மூலம் இளைஞர்களையும், பொதுமக்களையும் போலி சாமியார்கள் ஏமாற்றுகின்றனர்.
இதுபோன்ற கயவர்களை இனிமேலாவது பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நம்மைப் போல இவர்களும் சாதாரண மனிதர்கள் தான். இவர்கள் பலகோடி ரூபாய்க்கு அதிபர்களாக மாற தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வந்த விளம்பரங்கள் தான் முக்கிய காரணம்.
அதே பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இன்று நித்யானந்தா முகத்தை தோலுறித்துக் காட்டியிருக்கிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
நித்யானந்தாவின் முகத்தை தோலுறித்துக் காட்டிய பத்திரிகைக்கும், தொலைக்காட்சிக்கும் எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இனிமேல் போலி சாமியார்களை விளம்பரப்படுத்த வேண்டாம்.
டாக்டர் உள்பட மற்ற துறையில் உள்ளவர்கள் தவறு செய்தால் கைது, சிறை என போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் நித்யானந்தா போன்ற போலி சாமியார்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களுக்கு திராவிடர் கழகம் எப்பொழுதும் எதிராக போராடும் என்றார்.


Click it and Unblock the Notifications
