அன்னிய நேரடி முதலீடு 25% சரிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 25 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.273 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் முதலீட்டுத் தொகை ரூ.204 கோடியாக குறைந்து காணப்படுகிறது.

கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் முதலீட்டு அளவு 13 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2009-10 நிதியாண்டு, ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 4 சதவீதம் குறைந்துள்ளது.

2009-10ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை இந்தியாவின் செய்யப்பட்ட அன்னிய முதலீடு அளவு 2,296 கோடி டாலர். இதே கால கட்டத்தில் முந்தைய 2008-09 நிதியாண்டில் இந்தியாவில் அன்னிய முதலீடு 2,386 கோடி டாலர் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+