டாஸ்மாக் பணியாளர்கள் 17ம் தேதி கடையடைப்புப் போராட்டம்
நெல்லை: பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் மார்ச் 17ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6720 டாஸ்மக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் மேற்பார்வையாளர்கள் என 31 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொழிலாளர் விதிமுறைகளுக்கு உட்பட்டு 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், கல்வி தகுதிக்கு ஏற்ப பிற துறைகளில் பதவி உயர்வு, அரசு துறை காலியிடங்களில் மதுக்கடை ஊழியர்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கதவடைப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அம்பையில் டாஸ்மாக் கடை மூடல்
இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து மேலாளர் மற்றும் அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அம்பை சந்தை பகுதி டாஸ்மாக் கடையுடன் கூடிய பாரில் ரூ.60 மதிப்புள்ள குவாட்டர் மதுபானத்தை ரூ.80க்கு விற்றனர். இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பார் உரிமையாளர்களுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அம்பை சந்தை பகுதி டாஸ்மாக் கடை இழுத்து மூடப்பட்டது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் அம்பை போலீசில் புகார் செய்தனர். அதில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதை தடுத்த எங்களை அடியாட்கள் வைத்து தாக்குவேன் என பார் உரிமையாளர் மிரட்டியதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே கடை ஊழியர்கள் தன்னை மிரட்டுவதாக பார் உரிமையாளரும் போலீசில் புகார் செய்துள்ளார். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தால்தான் கடையை திறப்போம் என டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications