பென்னாகரம்: 33 வேட்ப மனுக்கள் ஏற்பு - நாளை மாலை இறுதிப் பட்டியல்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் தாக்கலாகியிருந்த 37 வேட்பு மனுக்களில் நான்கு மட்டும் நிராகரிக்கப்பட்டன. மற்ற 33 மனுக்களும் ஏற்கப்பட்டன.
போட்டியிலிருந்து விலக விரும்புவோர் நாளை மாலைக்குள் வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கப்படும்.
இன்பசேகரன் (திமுக), டி.ஆர்.அன்பழகன் (அதிமுக), தமிழ்குமரன் (பாமக), காவேரிவர்மன் (தேமுதிக) உள்பட 37 பேர் பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நேற்று தேர்தல் அதிகாரி மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சய்போஸ்ரெட்டி, அஹுஜா, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனை இறுதியில், தி.மு.க. மாற்று வேட்பாளர் ஜானகி, அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் வேலுமணி, பா.ம.க. மாற்று வேட்பாளர் சாந்தா ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல சுயேச்சை வேட்பாளர் மனிதன் டெபாசிட் செலுத்தாததாலும், சொத்து கணக்கு தாக்கல் செய்யாததாலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மீதமிருந்த 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications