பொன்சேகா மீதான ராணுவ கோர்ட் விசாரணைக்கு நாள் குறிப்பு - நீதிபதிகள் நியமனம்
Subscribe to Oneindia Tamil

இதற்காக 3 பேர் கொண்ட ராணுவ கோர்ட் நீதிபதிகளை ராஜபக்சே நியமித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் எச்.எல். வீரதுங்க, மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜயதுங்க மற்றும் டீ.ஏ.ஜயதிலக்க ஆகியோர் ராணுவ கோர்ட் நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ நீதி மற்றும் ஆலோசனை சட்டம் 109 ஆம் பிரிவின் கீழ் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை கடற்படை தலைமையகத்தில் வைத்து இந்த விசாரணையை நடத்தவுள்ளார்களாம்.
மேலும், ராணுவத்தில் பணியாற்றிய போது அரசியலில் ஈடுபட்டது தொடர்பான 3 குற்றச்சாட்டுக்கள் குறித்து 16ம் தேதி விசாரிக்கப்படவுள்ளார் பொன்சேகா.












Click it and Unblock the Notifications