10 ஆண்டுகளாக மனித உரிமைக்காக போராடும் ஷர்மிளா மீண்டும் கைது!
இம்பால்: மணிப்பூரில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் நாகா தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்தில் கடந்த 1958ம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது.
ஆனால் இந்த சட்டத்தினால் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படவில்லை. மாறாக மனித உரிமை மீறல்களே அதிகளவில் அரங்கேறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலா அருகே உள்ள மாலோம் என்ற கிராமத்தில் ராணுவ வீரர்கள் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக்கொன்றதை ஷர்மிளா என்ற இளம் பெண் பார்த்தார்.
கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, இதற்கு காரணமான கொடிய சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
மனித உரிமை மீறல்களை கண்டித்தும், ராணுவ சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து பல மாதங்கள் உணவை மறுத்து வந்த ஷர்மிளாவை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக திரவ உணவு அளித்து போலீசார் உயிர் பிழைக்கச் செய்தனர்.
குறிப்பிட்ட காலம் வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை பொது இடத்தில் தொங்கினார் ஷர்மிளா.
மீண்டும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து வலுக்கட்டாயமாக திரவ உணவு அளிப்பதும், சிறையில் இருந்து விடுதலையாகி ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதும் ஆண்டுதோறும் வாடிக்கையாக நடக்கும்.
இப்படியே கடந்த 9 ஆண்டுகளாக ஷர்மிளாவின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடந்த திங்கள் கிழமை அன்று, சமீபத்தைய நீதிமன்ற காவல் முடிந்து ஷர்மிளா விடுதலை செய்யப்ப்பட்டார்.
30 வயதேன ஆன ஷர்மிளா, தொடர் போராட்டம் காரணமாக, வற்றிய உடலும், பிதுங்கிய எலும்புமாக சிறையில் இருந்து வந்தவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக பொது இடத்தில் அமர்ந்துவிட்டார்.
இதையடுத்து வழக்கம் போல போலீசார் ஷர்மிளாவை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு திரவ உணவு பலவந்தமாக தரப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை இரவு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஷர்மிளாவின் போராட்டம், சிறைவாசம் 10வது ஆண்டிலும் தொடர்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications