டெல்லி வந்தார் புடின் - பிரதமருடன் இன்று பேச்சு
டெல்லி: ரஷ்யப் பிரதமர் விலாடிமில் புடின் டெல்லி வந்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
புடின் இந்திய பயணத்தின் முக்கிய அம்சமாக 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தளவாட விற்பனை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
விண்வெளி, மின்சாரம், பாதுகாப்பு துறை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திடவுள்ளனர்.
10 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்தம் 15 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையேயும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முக்கியமானது 2.35 பில்லியன் மதிப்பில் இந்தியா வாங்கவுள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற அணு சக்தி போர்க் கப்பலாகும்.
நீண்ட காலமாகவே இதன் விற்பனை தாமதமாகி வருகிறது. இந்தப் போர்க் கப்பலுக்கு இந்தியா, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்றஉ பெயரிட்டுள்ளது.
அதேபோல 29 மிக் -29 கே போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவுள்ளது.
இதுதவிர இரு நாடுகளும் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.
மேலும் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்திலும் ரஷ்யா கையெழுத்திடவுள்ளது.
மன்மோகன் சிங்கும், புடினும் சந்தித்துப் பேசும்போது தலிபான்கள் பிரச்சினை குறித்தும் முக்கியமாக விவாதிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications