விளைச்சல் உயர்ந்தது- அரிசி, சர்க்கரை விலை குறைகிறது

Subscribe to Oneindia Tamil

Rice Bags
சென்னை: வட மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகமானதாலும், தமிழகத்தில் நெல் விளைச்சல் உயர்ந்ததாலும் சர்க்கரை மற்றும் அரிசியின் விலை ஓரளவு குறையத் துவங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வரை சர்க்கரை விலை கிலோ ரூ.44-க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது கிலோ ரூ.32-க்கு விற்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகமானதாலும், வெளிநாட்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாலும் சர்க்கரை விலை குறைந்து வருவதாகவும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அனைத்து மில்களுக்கும் இந்த மாதம் 16 லட்சத்து 8 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ததால் சர்க்கரை உற்பத்தி 1 1/2 கோடிடன் அதிகரித்துள்ளது. இதனால் சர்க்கரை விலை கிடு கிடு என சரிந்து வருவதாக அவர் கூறினார்.

இதேபோல் தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் அதிகமானதால் அரிசி விலை கிலோவுக்கு 2 முதல் 4 ரூபாய் வரை குறைந்துள்ளது

அதிசய பொன்னி புதுசு கிலோ ரூ.22-க்கு விற்பனையானது இப்போது ரூ.18-க்கு விற்கப்படுகிறது. பாபர்ட்லா அரிசி கிலோ ரூ.24-ல் இருந்து ரூ.22 ஆக குறைந்துள்ளது. ரூபாளி பொன்னி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.18 ஆகவும் குச்சி ரக பொன்னி கிலோ ரூ.18-ல் இருந்து ரூ.16 ஆகவும் சிகப்பு பொன்னி கிலோ ரூ.19-ல் இருந்து ரூ.17 ஆகவும் குறைந்துள்ளது.

இதேபோல் இட்லி அரிசி புதுசு கிலோ ரூ.22-ல் இருந்து ரூ.18 ஆக குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+