பென்னாகரத்துக்குப் பிரசாரத்திற்குப் படையெடுக்கும் தென் மாவட்ட திமுக, அதிமுகவினர்
நெல்லை: பென்னாகரம் இடைத்தேர்தல் பணிக்கு தென்மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் படையெடுத்து சென்று வருகின்றனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதி்முக, தேமுதிக, திமுக, பாஜக கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பென்னாகரம் இடைத் தேர்தலுக்கு பின் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிக்களுக்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள், ஓன்றிய, நகர, தொகுதி பிரமுகர்கள் படை எடுத்துள்ளனர்.
பென்னாகரம் இடைத் தேர்தல் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விடுதிகள் நிரம்பி வழிவதால் தென்மாவட்டத்தில் இருந்து படையெடுக்கும் கட்சிகாரர்கள் அருகில் உள்ள கிராமம், நகரங்களில் 15 தினங்களுக்கு வீடுகளை வாடகை பிடித்து தங்கி வருகின்றனர்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள வீடு புரோக்கர்கள், வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோர்க்கு பணமழை கொட்டுவதாக அங்கு முகமிட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
திருமங்கலம், திருச்செந்தூர் தொகுதிகளை போன்று பென்னாகரம் தொகுதியிலும் கரன்சி மழை பொழிய துவங்கியுள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications