பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு பணம் - நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், 'பென்னாகரம் இடைத்தேர்தலில், புதிய வரலாறு படைக்கும் வகையில் பணம் வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய்; குடும்பத்திற்கு 5000 ரூபாய் என்று பணம் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பணத்தை திணித்துவிட்டுச் செல்கிறார்கள். வேட்டி, சேலைகள் போன்ற பரிசுப் பொருட்களும் வீடுவீடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரிசி, வேட்டி, சேலை மூட்டைகளை கட்சி தோரணங்களுடன் கடத்தி வந்த லாரிகள், இரு சோதனைச் சாவடிகளை சுதந்திரமாகக் கடந்து தொகுதிக்குள் வந்திருக்கின்றன.
அவை மடக்கி பிடிக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. 24 மணி நேரம் கழித்தும் அதுகுறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. யாரையும் கைது செய்யவும் இல்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது? முறைகேடுகளை தடுக்கும் சட்டங்களும், அவற்றை அமல்படுத்த வேண்டிய ஆணைய அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
தேர்தலில் பணம் தான் பிரதானம் என்பதை அனுமதித்தால், இனி தேர்தலை நடத்தவே தேவையில்லை.
பொதுப்பணித்துறை வேலைகளையும், சாராயக் கடைகளையும் ஏலம் விடுவது போல, தொகுதிகளை ஏலம் விட்டு யார் அதிகத் தொகைக்கு எடுக்கிறார்களோ அவர்களே அந்த தொகுதியில் எம்எல்ஏ அல்லது எம்.பி. என்று அறிவித்துவிடலாம்.
அல்லது டெண்டர்கள் கோரி அதில் யார் அதிக தொகையை குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு தொகுதியை விற்றுவிடலாம். அப்படி செய்தால் அரசியல் கட்சிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வேலை மிச்சமாகும்.
தேர்தல் ஆணையம் தனது தூக்கத்தைக் கலைத்துவிட்டு, பண விநியோகத்தையும், இதர முறைகேடுகளையும் தடுத்து நிறுத்தி, பென்னாகரம் இடைத்தேர்தல் வரும் காலத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக அமையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications