ஒரே நாளில் 31,000 ஊழியர்கள் ஓய்வு - சிக்கலில் கேரள அரசு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இம்மாத இறுதியில் சுமார் 31 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். இதனால் ஏற்படும் நிதி மற்றும் நிர்வாக சிக்கலை எப்படி எதிர்கொள்வது என கேரள அரசு அதிகாரிகள் விழிபிதுங்கி யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
கேரளாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தேதி இந்த வருடம் முதல் ஒரே சீராக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருடத்தில் எந்த மாதத்தில் ஓய்வு பெறும் நாள் வந்தாலும் மார்ச் 31ம் தேதியே அவர்களை பணியில் இருந்து விடுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி ஓய்வு பெறும் நாள் வந்தாலும் அவருக்கு அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை கூடுதலாக பணியாற்றலாம். இந்த உத்தரவு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், கேரள அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம் 31ம் தேதியுடன் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 31 ஆயிரம் பேர் ஓய்வு பெற உள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது கொடுக்க வேண்டிய சலுகைகள் பலகோடியை தாண்டும். மேலும் அனைத்து இடங்களுக்கும் உடனடியாக ஊழியர்களை நியமிக்க முடியாது.
வேலை காலியிடம் வந்தால் மட்டும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆட்களை நியமிக்க முடியும் என்பதால் அரசு பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை சட்டசபையில் இதுபற்றி உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் அச்சுதானந்தன், இவ்விவகாரத்தை சமாளிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications