போரினால் வாழ்க்கையை தொலைத்த தமிழர்கள் - சிஎன்என் கண்ணீர் செய்தி

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கு இடையே கடந்த ஆண்டு நடந்த போரின் போது லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கை, கால்களை இழந்தும் கொடூரமான காயங்கள் பட்டும் அவதிப்பட்டனர்.
போரின்போது தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் போரின்போது சண்டைக்கு நடுவில் சிக்கி கை, கால், மற்றும் உடல் உறுப்புகளை இழந்தவர்கள்.
அவர்களுக்கு அரசு தரப்பில் உதவி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உடல் உறுப்புகளை இழந்து விட்ட நிலையில் வாழ்க்கையே முடிந்துவிட்ட விரக்தியுடன் அவர்கள் இருந்து வருகின்றனர்.
அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து செய்தி ஒளிபரப்பியுள்ளது. கை, கால்களை இழந்த மக்கள் இப்போது வாழ முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட ரவீந்திரன் (21) என்பவர் அளித்த பேட்டியில்,
'போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் உயிர் பிழைப்பதற்காக பல மாதங்களாக ஒவ்வொரு பதுங்கு குழியாக சென்று மறைந்து வாழ்ந்தோம்.
இறுதி கட்ட போரின்போது அதிக அளவில் குண்டு வீச்சு நடந்தது. நான் ஓடிப் போய் ஒரு பதுங்கு குழிக்குள் நுழைந்தேன். அதன் மீதே ஒரு குண்டு வந்து விழுந்தது.
இதில் என் உறவினர் உயிர் இழந்தார். எனது 2 கால்களும் துண்டாகி விட்டன. ஒரு கண்ணையும் இழந்தேன். இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறேன். கால்களும், கண்ணும் இல்லாத நான் எப்படி வாழப் போகிறேன் என்பதே தெரியவில்லை. எனது வாழ்க்கை முடிந்துபோய் விட்டது' என்று கூறியுள்ளார்.
இவர் ஒரு உதாரணம் தான். இவரைப் போல லட்சக்கணக்கான தமிழ் மக்கள், வாழ்க்கையை தொலைத்துவிட்டு உயிரை மட்டும் சுமந்துகொண்டு வெற்றுடலாக கிடக்கிறார்கள் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications