ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி
காந்தஹார்: ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
அங்குள்ள சிறைச்சாலை, போலீஸ் தலைமையகம், இரண்டு பிற இடங்களில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகர் இன்னும் தலிபான்களிடமிருந்து முழுமையாக விடுபடவில்லை.
சிறைச்சாலைக்குத்தான் தலிபான்கள் முக்கியமாக குறி வைத்திருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கன் அதிபர் கர்சாயின் உறவினரும், மாகாண கவுன்சில் உறுப்பினருமான அகமது வாலி கர்சாய் கூறுகையில், எனது வீட்டுக்கு அருகே 2 குண்டுகள் வெடித்தன. இதில் வீட்டுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
கடந்த 2008ம் ஆண்டு சிறைச்சாலையை தீவிரவாதிகள் தகர்த்தனர். பின்னர் அதை சீரமைக்கும் பொறுப்பை கனடா நாட்டுப் படையினர் மேற்கொண்டனர். பாதுகாப்புப் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
கடந்த முறை சிறைச்சாலையை தகர்த்த தீவிரவாதிகள் பல கைதிகளை அங்கிருந்து கொண்டு சென்றனர். அவர்களில் பலர் தீவிரவாதிகள் ஆவர். அதைத் தொடர்ந்து கனடியப் படையினர் சிறைச்சாலையை மிகவும் உறுதி படைத்ததாக மாற்றி விட்டதால் இந்த முறை நடந்த குண்டுவெடிப்பில் தலிபான்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications