வக்கீல்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை
வள்ளியூர்: வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்புகளை கைவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் தெரிவித்தார்.
வள்ளியூரில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மைதீன்கான் தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயராகவன் வரவேற்றார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கோபால், வக்கீல் தவசிராஜன், கலெக்டர் ஜெயராமன், எம்எல்ஏக்கள் வசந்தகுமார், அப்பாவு ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் நீதிபதி ராமநாதன் பேசுகையில்,
பொதுமக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பத்திற்கும், இந்த அமைப்பு முறையாக செயல்படுவதற்கும் நீதிபதிகளுக்கு சமமான பங்கு வக்கீல்களுக்கும் உண்டு. ஏனெனில் அவர்கள்தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள்.
நீதிபதிகள் நடுவர்களாக இருந்து செயல்படுகிறார்களே தவிர வக்கீல்களின் நீதிமன்ற பரிவர்த்தனை தான் வழக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதால் அவர்கள் மட்டுமின்றி முக்கியமாக பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அதனால் நாம் அந்த கடமைகளில் இருந்து தவறக்கூடாது. வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு விட்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications