பென்னாகரம்: கருணாநிதி 1 நாள், ஜெ. 2 நாள், விஜய்காந்த் 5 நாள் பிரச்சாரம்

பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய நான்கு முக்கியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக - பாமக இடையில்தான் மோதல் படு சூடாக இருக்கிறது.
அதிமுக சோம்பிப் போய்க் கிடக்கிறது. தேமுதிகவைக் காணவில்லை.
இந் நிலையில் திமுக வேட்பாளருக்காக முதல்வர் கருணாநிதி ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். அவர் பிரசாரம் செய்ய வசதியாக மூன்று நாட்களைத் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும் 24ம் தேதி அவர் பிரசாரம் செய்யலாம் என்று தெரிகிறது.
இதேபோல துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஜெயலலிதா 2 நாள் பிரச்சாரம்:
இந் நிலையில் அதிமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.
தற்போது கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா பிரசாரத்திற்காக வருகிற 21ம் தேதி சேலம் வருகிறார். அங்கு தங்கும் ஜெயலலிதா 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரு நாட்கள் பென்னாகரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
21ம் தேதி, சேலம் மாவட்டம் மேச்சேரி வழியாக பென்னாகரம் தொகுதிக்கு ஜெயலலிதா வேனில் செல்கிறார். அங்கு தொப்பையாறு, நாகமலை, பெரும்பாலை, ஏரியூர், நெருப்பூர் வழியாக பல்வேறு ஊர்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
அன்று மாலை பென்னாகரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர் டி.ஆர்.அன்பழகனை ஆதரித்து பேசுகிறார். பின்னர் தர்மபுரி வழியாக மீண்டும் சேலம் வந்து தங்குகிறார்.
23ம் தேதி மீண்டும் தர்மபுரி வழியாக வேனில் வந்து இண்டூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தாளபள்ளம், மாமரத்துப்பள்ளி, ஆலமரத்துப்பட்டி, மன்னேரி வழியாக பிரசாரம் செய்து முடித்து விட்டு பாப்பாரப்பட்டியில் நடக்கும் பொதுகூட்டத்தில் அவர் பேசுகிறார்.
21ம் தேதி முதல் விஜயகாந்த் 5 நாள் பிரசாரம்:
இந் நிலையில் தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து தலைவர் விஜயகாந்த் வரும் 21, 22, 23, 24, 25 ஆகிய 5 நாட்கள் பென்னாகரம் தொகுதி முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
மாவட்ட கழக செயலாளர்களும், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை கழக செயலாளர்களும், நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் விஜயகாந்த் பிரசாரம் செய்கின்ற பகுதிகளில் சிறப்பான முறையில் வரவேற்று தேர்தல் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித்தரக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications