லோக்சபா தொகுதிகளை அதிகரித்து, இரட்டை உறுப்பினர் முறையை அமல்படுத்த பாஸ்வான் யோசனை!
டெல்லி: லோசக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். மேலும், இரட்டை உறுப்பினர் முறையைக் கொண்டு வர வேண்டும். இதைச் செய்தால் லோக்சபாவில் மகளிர் மசோதாவை எளிதாக நிறைவேற்றலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய தலித் முன்னணி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பாஸ்வான் பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் சுழற்சி முறையி் பிரதிநிதித்துவம் என்பது சரிப்பட்டு வராது. ஒவ்வொரு தேர்தலுக்கும் தனித் தொகுதிகளை மாற்றுவதால், ஜனநாயகத்தின் அடிப்படையே தகர்ந்து போய், பலவீனமாகி விடும்.
இந்த முறையல், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் தங்களது தொகுதி நலனில் அக்கறை செலுத்தவும் முடியாது. பிற விஷயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். இந்தக் குறையை நீக்கி விட்டுத்தான் லோக்சபாவில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
ராஜ்யசபாவில் மகளிர் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி சஸ்பென்ட் ஆகியுள்ள எனது கட்சி எம்.பி சபீர் அலி மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களின் ஆதங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க யாருமே இல்லை. இதனால்தான் அன்றைய தினம் எம்.பிக்கள் ராஜ்யசபா தலைவரின் மைக்கைப் பறிக்க முயற்சித்தனர்.
தற்போதைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக 181 தொகுதிகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மகளிருக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். அதேசமயம், ஆண்களுக்கும் பாதிப்பு வராது.
மேலும் திட்டமிடப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், முஸ்லீம்களுக்கு நியாயமான ஒதுக்கீடு தரப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இரட்டை உறுப்பினர் பதவி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஒரு தொகுதியிலிருந்து ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
1951ல் நடந்த லோக்சபா தேர்தல் இரட்டை உறுப்பினர் முறைப்படிதான் நடந்தது என்றார் பாஸ்வான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications