நித்தியானந்தாவின் நெல்லை சீடர்களுக்கு சிக்கல்- போலீஸ் விசாரணை

நெல்லை மாவட்டத்தில் இரு இடங்களிலும், நெல்லை மாநகரத்தில் டவுனிலும் நித்தியானந்தாவின் மையம் உள்ளது. இவற்றில் வாரத்தில் நான்கு நாட்கள் யோகாசன பயிற்சி நடந்து வந்துள்ளது.
இந்த தியான மையங்களில் 300க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வந்துள்ளனர். இந்த தியான மையங்கள் நெல்லை மாநகரத்தில் இரு பள்ளிகள் மற்றும் இரு ஓட்டல்களில் நித்தியானந்தா 4 மாதங்களுக்கு ஒருமுறையில் நேரில் வந்து தியான வகுப்புகள், ஆன்மீக சொற்பொழிவு நடத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள ரகசிய போலீசார் நித்தியானந்தாவால் சீடர்கள், பக்தர்கள் அல்லது தியான மையத்திற்கு வந்து செல்பவர்கள் யாரேனும் சொத்து, பணம் மற்றும் ஏதேனும் வகையில் ஏமாற்றப்பட்டார்களா, அல்லது உடந்தையாக இருந்துள்ளார்களா என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் ரகசிய விசாரணையை தொடர்ந்து சில பக்தர்கள் வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர். பக்தர்களிடம் இருந்து ஏதேனும் புகார் பெற முடியுமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சில சீடர்கள் மற்றும் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுதவிர நாங்கள்தான் கடவுள் என்று கூறிவரும் சில ஆன்மீக சாமியார்களின் ஆன்மீக மன்றம், தியான மடங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications