காரைக்கால் மது பாரில் மோதல்-கல்லூரி ஆசிரியர் பலி
காரைக்கால்: காரைக்காலில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
காரைக்கால் அடுத்த பொறையாறு மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமிசுந்தர் (30) . இவர் காரைக்காலில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவர், பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஒயின்சில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது மொபைல் போனில், தன் உறவினருடன் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
இதனால், எதிரே மது குடித்துக் கொண்டிருந்த காரைக்கால் டோபி காலனியை சேர்ந்த ஆரோக்கியராஜ் -க்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாருக்கு வெளியே வந்த ஆரோக்கியசாமி சுந்தரை, ஆரோக்கியராஜ் வழிமறித்து தாக்கினார். மேலும், கண்ணாடி துண்டுகள் மூலம் ஆரோக்கியசாமிசுந்தரின் மார்பில் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த ஆரோக்கியசாமிசுந்தரை பார் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவ மனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஆரோக்கியராஜை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications