மகளிர் மசோதா- இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி: முலாயம்
லக்னோ: 'நாட்டில் ஜனநாயக நடைமுறைகளை உடைத்தெறியவும், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான சதித் திட்டத்தை நிறைவேற்றவுமே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரப்படுகிறது' என்று சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டிளித்த போது முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,
'நாட்டில் ஜனநாயக நடைமுறைகளை உடைத்தெறியவும், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான சதித் திட்டத்தை நிறைவேற்றவுமே காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து எதிர்க்கும். எங்களைப் பொறுத்தவரை இது, வாழ்வா சாவா என்கிற போராட்டம்.
இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றி விட்டாலும், தற்போது காங்கிரஸ் எம்பிக்களே இதை எதிர்க்கின்றனர். அதோடு பாஜக எம்பிக்களும் தற்போது இந்த மசோதாவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
காங்கிரசின் முகத்திரையை விரைவில் கிழிப்போம். இந்த மசோதாவின் மூலம் காங்கிரஸ் தீட்டியுள்ள சதி திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எடுத்துச் சொல்வோம்.
முஸ்லிம் சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவேண்டு்ம் என்ற உள்நோக்கத்துடன் காங்கிரஸ் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த மசோதாவின் மூலம் ஆண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். ஆண்களுக்கு அதிகாரத்தை குறைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்ய வெளிநாட்டு தீய சக்திகள் திட்டமிடுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான இந்த சர்வதேச சதியில் காங்கிரஸும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications