நகைக்கடையில் பணம் பறிப்பு - ஹரியானாவில் 8 போலீசார் கைது
பானிப்பட்: லஞ்ச ஒழிப்புப் படையினர் போல நடித்து நகைக்கடை அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற 8 போலீஸ்காரர்கள் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர்.
அரியானா மாநிலம் பானிபட்டில் அதிரடிப்படை போலீஸ் மையம் உள்ளது. தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் எதிர்த்து போராட வேண்டிய இவர்கள் பொது மக்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி பானிபட்டில் உள்ள நகை கடைக்குள் ஹரியானாவின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள்கள் சென்றுள்ளனர்.
தாங்கள் சண்டிகார் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் எனக்கூறி கடை அதிபர் மல்ஹோத்ராவிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இவர்களின் நடத்தையைப் பார்த்து சந்தேகம் அடைந்த மல்ஹோத்ரா அவர்களுக்கு தெரியாமல் பானிபட் நகர போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் தெரிவித்த யோசனைப்படி, சிறிது நேரம் காக்கவைத்து, பணத்தை அதிரடிப்படை போலீசாரிடம் நகைக்கடை அதிபர் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த பானிபட் போலீசார் கையும் களவுமாக அதிரடிப்படை போலீசாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் ஹரியானா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பானிபட் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications