மான்கறி டாக்டரின் மகன், மருமகளுக்கு போலீஸ்வலை
சென்னை: திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மோசடி செய்து சிறையில் அடைக்கப்பட்ட மருத்துவரின் மகன் மற்றும் மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை நடத்தி வந்தவர் டாக்டர் விஜயகுமார்.
இவர் மான்கறி வைத்தியம் என்ற பெயரில் மோசடி செய்வதாக புகார் கூறப்பட்டது. சுமார் ரூ.2 கோடி அளவுக்கு பணம் மோசடி செய்ததாக 27 பேர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இவற்றின் அடிப்படையில் இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் இவர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பிரசாந்த லட்சுமி என்ற பெண், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் டாக்டர் விஜயகுமாரின் மகன் டாக்டர் ஜெகதீஸ்குமார், அவரது மனைவி டாக்டர் அனிலா ஆகியோரும் வைத்தியம் பார்ப்பதாகக் கூறி ரூ.4 லட்சம் பணம் மோசடி செய்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனு மீது மைலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications