பெண்களின் நோய்களை குணப்படுத்தும் 'கும்மாங்குத்து' சாமியார்!
எடாவா (உத்தரப் பிரதேசம்): நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி பெண்களை பிரம்பால் அடித்தும், உதைத்தும் வந்த அதிரடி மந்திர வைத்திய சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் சிட்புரா என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள காளி கோயிலில் நேக் சிங் என்ற சாமியார் பெண்களை அடித்து, உதைத்து, நைய்யப் புடைத்து விசித்திரமான முறையில் நோய்களை குணப்படுத்துவதாக தகவல்கள் பரவின.
பிரத்தியேகமாக பெண்களுக்கு மட்டும் மந்திர வைத்தியம் பார்க்கும் இவர், பாதிக்கப்பட்ட பெண்களை காளி கோயிலில் உட்கார வைத்து தாறுமாறாக அடித்து உதைக்கிறார்.
பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் ஒங்கி அறைந்தும், திடீரென வயிற்றிலும், முதுகிலும் குத்து விட்டு அலற வைக்கிறார்.
சில சமயங்களில் தலை மீது கூட ஏறி நின்றிருக்கிறார் என கிராமமக்கள் கூறுகின்றனர்.
இந்த 'அதிரடி மந்திர' வைத்தியத்தின் மூலமாக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகிவிடுவதாக தகவல் பரவியது.
'காளி ஆத்தாள் தன் உடலில் புகுந்து, நோயாளிகளை தன் கையாலேயே அடித்து நோய்களை வாங்கிக் கொள்கிறாள்' என்று இவர் கூறுவதை நம்பி ஏராளமான முதிர்கன்னிகள், இளம் பெண்கள் என ஏராளமானோர் கடந்த சில நாட்களாக அடி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இதுபற்றிய தகவல் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு செய்தி அறிக்கை மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உ.பி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இடா மாவட்ட தனிப்படை போலீசார் இன்று சிட்புரா கிராமத்துக்கு சென்றது.
போலீஸ் வரும் தகவலை அறிந்த சாமியார் தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications