சித்தியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற ஆட்டோ டிரைவர்
சென்னை: ஆத்திரத்தில் சித்தியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பெருங்குடிகெனால் புரத்தை சேர்ந்தவர் ராமு (40). கூலி தொழிலாளி இவரது மனைவி மலையம்மாள். வீட்டின் பக்கத்தில் மலையம்மாளின் அக்காள் முனியம்மாள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை நடந்தது. நேற்று முன்தினம் மீண்டும் மலையம்மாள்- முனியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த முனியம்மாள் மகன் ஆட்டோ டிரைவரான பச்சையப்பனும் (27) சண்டை போட்டார். இதில் ஆத்திர மடைந்த அவர் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை மலையம்மாள் மீது ஊற்றி தீபற்றவைத்தார்.
தீ உடல் முழுவதும் பரவியது. மலையம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து தீயை அணைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி மலையம்மாள் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பச்சையப்பனை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பெருங்குடி பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் கொலையாளி சுற்றிதிரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் விரைந்து வந்து பச்சையப்பனை கைது செய்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications