For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாஃப்ட்வேர் கோளாறு: சிக்கலில் போயிங் 777!

By Staff
Google Oneindia Tamil News

Boeing
வாஷிங்டன்: போயிங் விமான நிறுவனத் தயாரிப்புகளில் மென்பொருள் கட்டமைப்பில் கோளாறு உள்ளதாகவும் இதனால் ஓடு பாதையில் குறித்த எல்லைக்கப்பாலும் விமானங்கள் ஓடுவதாகவும் அமெரிக்க விமானத் துறை நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த கோளாறு காரணமாக வழக்கத்தை விட குறைவான வேகத்தில் டேக் ஆஃப் ஆவதாகவும், பல நேரங்களில் ஓடு பாதையின் டேக் ஆஃப் எல்லையைத் தாண்டியும் விமானங்கள் செல்ல நேர்கிறதாம். இது பயணிகளின் உயிரோடு விளையாடுகிற சமாச்சாரம் என்பதால், உடனடி நடவடிக்கை கோருகிறது அமெரிக்கா.

1995ம் ஆண்டிலிருந்தே இந்தப் பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததாம். ஆனால் சமீப காலமாக, விமானங்கள் அடிக்கடி டேக் ஆஃப் ஆகாமலேயே நின்று விடுகின்றனவாம்.

மொத்தம் 818 போயிங் 777 விமானங்களில் இந்தப் பிரச்சனை உள்ளதாகவும், இவை அனைத்தையும் போயிங் நிறுவனம் உடனே சரிப்படுத்தியாக வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X