நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடி - நோட்டரி வக்கீல் கைது
கோவை: சிறுநீரக தான பத்திரத்தில் நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்த வழக்கில் நோட்டரி வக்கீல் கைதானார். பெண் வக்கீல் உள்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை வடவள்ளி அம்மன்குளத்தை சேர்ந்தவர் ரவி (38). இவர் டாஸ்மாக் மதுபான கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.
அவரது 2 சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ரவியின் மனைவி விஜயலட்சுமி, கணவருக்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார்.
சிறுநீரகம் தானம் செய்யும் நபர் நோட்டரி வக்கீல் முன்னிலையில் ஒப்புதல் அளித்து, மாஜிஸ்திரேட் தகுதியிலான நீதிபதி மூலம் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
இதற்காக ரவி, வடவள்ளி பகுதியில் வசித்து வரும், முன்னாள் அரசு வக்கீல் சரோஜா என்பரை அணுகினார். தனக்கு தெரிந்த மற்றொரு நோட்டரி வக்கீலான தங்கவேல் மூலம் மாஜிஸ்திரேட் பரிந்துரையை பெற்று வழங்க முடியும் என்றும், இதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து வக்கீல் சரோஜா மூலம் நோட்டரி வக்கீல் தங்கவேலுவுக்கு, ரவி ரூ.23 ஆயிரம் வழங்கினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டு தங்கவேலு தயாரித்துக் கொடுத்த பிரமாண பத்திரத்தை சிறுநீரக கண்காணிப்பு குழுவிடம் ரவி வழங்கினார்.
பிரமாண பத்திரத்தில் உடுமலை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுஜாதாவின் பரிந்துரையும், கையெழுத்தும் இருந்தது.
சிறுநீரக தான பத்திரத்தை, கோவை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆர்.டி.ஓ. மற்றும் போலீசாரின் உதவியுடன் ஆய்வு நடத்தியபோது உடுமலை நீதிபதி சுஜாதா இந்த பிரமாண பத்திரத்தில் கையெழுத்திடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ரவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பரிந்துரை ரத்து செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ரவி, போலீசில் புகார் மனு அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நீதிபதி சுஜாதாவின் கையெழுத்தை போலியாக போட்டும், நீதிபதியின் முத்திரையை போலியாக தயாரித்தும் பிரமாண பத்திரத்தில் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நோட்டரி வக்கீல் தங்கவேலு கைது செய்யப்பட்டார். மேலும் பெண் வக்கீல் சரோஜா, மற்றொரு வக்கீல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications