வானில் 37 கிமீ உயரத்தில் இருந்து 'ஜம்ப்'-ஒரு 'ஃபியர்லெஸ்' பயணம்!

41 வயதான பாம்கர்ட்னர் ஆஸ்திரிய ராணுவப் படையில் 'பாராட் ரூப்பராக' பணியாற்றியவர். விமானங்கள், பாராசூட்டுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களில் இருந்து இதுவரை 2,500க்கும் மேற்பட்ட தடவை இவர் குதித்து சாகசங்கள் நிகழத்தியிருக்கிறார்.
ரியோடிஜெனீரோவில் உள்ள பிரமாண்ட இயேசு கிறிஸ்து சிலையின் மேலிருந்து (95 அடி உயரம்) குதித்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் 2007ம் ஆண்டு தைவானில் உள்ள 'தைப்பே 101' கட்டிடத்தின் 90வது மாடியில் இருந்து குதித்தார். இதன் உயரம் ஆயிரத்து 280 மட்டுமே.
ஆனால் தற்போது இவர் ஹீலியம் பலூன் உதவியுடன், பூமியில் இருந்து சுமார் 37 கி.மீ உயரத்துக்கு சென்று அங்கிருந்து குதிக்க திட்டமிட்டுள்ளார்.
அதாவது சுமார் 1,20,000 அடி உயரத்தில் 'ஸ்ட்ரேட்டோ அடுக்கில்' இருந்து இவர் பூமியை நோக்கி குதிக்க உள்ளார்.
இவரின் திட்டப்படி, பலூனில் இருந்து பூமியை நோக்கி வெளியேறிய அடுத்த 30 வினாடிகளில், ஃபெலிக்ஸ் மணிக்கு சுமார் 690 மைல் வேகத்தில் கீழ் நோக்கி இறங்குவார். அதாவது ஒலிக்கு இணையான வேகத்தில் பெலிக்ஸ் பயணிப்பார்.
மணிக்கு ஆயிரத்து 100 கிமீ வேகம் என்ற நடுங்க வைக்கும் வேகத்தில் இவர், சுமார் ஐந்தரை நிமிடங்கள் பயணித்து விட்டு குறிப்பிட்ட துல்லியமான நேரத்தில், உடலில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட்டை இயக்கி பத்திரமாக தரையிறங்க வேண்டும்.
பூமியை தாண்டிய வெளியில், விசித்திர சூழலில் பயணிக்க வேண்டியிருப்பதால், ஃபெலிக்ஸுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் முதல் பல்வேறு நுணுக்கமான தொழில்நுட்ப வசதிகளை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செய்து தருகிறது.
ரெட் புல் நிறுவனம் இதற்கான பிரதான 'ஸ்பான்சர் ஷிப்'பை ஏற்றுக் கொண்டுள்ளது. நாசா நிறுவனம் இத்திட்டத்தில் வெறுமனே உதவிக்காக ஈடுபடாமல், பல்வேறு ஆய்வுக் காரணங்களுக்காக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.
விண்வெளியில் மனிதர்களின் போக்குவரத்து, வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
பல்வேறு நிலைகள், சூழல்கள் கொண்ட வெளிகளில் மனிதன் பயணிக்கும் போது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாசா ஆய்வு செய்தாக வேண்டிய அவசியம் உள்ளது.
ஃபெலிக்ஸின் இந்த முயற்சியின் விளைவாக, பூமியைத் தாண்டிய வெவ்வேறு, அடுக்குகளில் நிலவும் சூழலால் மனிதனின் உடலியல் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்த பல்வேறு உண்மைகளை ஆராய முடியும்.
ஏற்கனவே கடந்த 1960களில் மெக்சிகோவில் விமானப் படை பைலட் கிட்டிங்கர் என்பவர் பலூன் மூலம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 800 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
தற்போது 81 வயதான கிட்டிங்கரும், ஃபெலிக்ஸுக்கு உதவியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த ஆண்டிலேயே இந்த சாதனை முயற்சியை ஃபெலிக்ஸ் மேற்கொள்வார் என தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications