அதிமுக நகர்மன்ற தலைவி மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்?
கரூர்: தாந்தோணி நகராட்சியில் ஏற்பட்ட மோதலில் திமுக உறுப்பினர்கள் தன்னை தாக்கிவிட்டதாக அதிமுக நகர்மன்றத் தலைவி ரேவதி ஜெயராஜ் புகார் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சியில் கடந்த 15 ம் தேதி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்ட 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு, முன்னதாக, கூடுதல் குடிநீர் திட்டம் குறித்து எழுந்த பிரச்சனையில் நகர் மன்ற தலைவி ரேவதி ஜெயராஜுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தீர்மானம் பதிவு செய்யப்படும் 'மினிட்ஸ்' புத்தகம், கமிஷனர் தெய்வசிகாமணியிடம் ஒப்படைக்காமல் தலைவர் ரேவதி தானே வைத்துள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
திமுக கவுன்சிலர் ரவி தலைமையில் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் விலக்கி விட்டனர். இந்நிலையில், திமுக கவுன்சிலர்கள் தன்னை தாக்கிவிட்டதாக கூறி நகர் மன்ற தலைவர் ரேவதி, மாஜி கவுன்சிலர் இளங்குமரன் ஆகியோர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications