அரசு பஸ் 'பிரேக்டவுன்'-கீழே இறங்கிய 4 பேர் லாரி மோதி பலி
காஞ்சிபுரம்: அரசு பேருந்து 'பிரேக் டவுன்' ஆனதால் சாலையில் இறங்கி நின்றிருந்த பயணிகள் மீது அந்த வழியே வந்த டேங்கர் லாரி மோதி 4 பேர் பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி அரசு பேருந்து நேற்றிரவு புறப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் என்ற இடத்தில் சென்றபோது டீசல் காலயாகி பேருந்து சாலையில் நின்றுவிட்டது.
இதனால் பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த டேங்கர் லாரி சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது.
இதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பானு (21), ரமா (45), லலிதா(35) மற்றும் ரஞ்சித்குமார் (17) ஆகிய 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 14 பேர் செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications