மங்களூரில் ஷோட்டா ஷகீலின் 11 கூட்டாளிகள் கைது
மங்களூர்: தென் கன்னட மாவட்ட போலீஸார் மங்களூரில் வைத்து தாதா ஷோட்டா ஷகீலின் 11 கூட்டாளிகளை வளைத்துப் பிடித்துள்ளனர். இவர்களுக்கும், ரவி பூஜாரி என்ற உள்ளூர் தாதாவுக்கும் இடையே நடக்கவிருந்த பயங்கர மோதலையும் போலீஸார் தடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்தும் நிழலுக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிதான் ஷகீல் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் - சிக்மகளூர் மஞ்சுநாத் என்கிற மஞ்சு (22), அசோக் நகர் சுஷில்குமார் என்கிற மோனு (24), குத்ரோலியைச் சேர்ந்த லதீஷ் நாயக் என்கிற லட்சே (21), அஸ்வின் அன்சான் (25), கொத்தரா கிராஸ் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அல்பன் டிசவுசா (38), பவந்தி நகர் லோஹித் கத்தி (21), ஊர்வா ஸ்டோர் பிரவீன் (30) மற்றும் சுஷன்சந்திரா (22), மும்பையைச் சேர்ந்த கேப்டனியோ கணேஷ் சிவராம ஷெட்டி (35), உ.பியைச் சேர்ந்த ராகேஷ் மிஸ்ரா, இன்னொரு மஞ்சு.
ஹரீஷ் ஷெட்டி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவர் நேபாளுக்கு ஓடி விட்டதாக தெரிகிறது.
பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர் ஹரீஷ் ஷெட்டி. 1998ல் நடந்த குரூப் சகோதரர்கள் படுகொலை தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் வெளியில் வந்து தலைமறைவானவர் இந்த ஷெட்டி.
ரவி பூஜாரி கோஷ்டிக்கும், இந்த 11 பேருக்கும் இடையே பெரும் மோதல் நடைபெறப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து அனைவரையும் வளைத்துப் பிடித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் திட்டத்திற்காக சோட்டா ஷகீல் இந்தக் கும்பலுக்கு ரூ. 2லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். வெஸ்டர்ன் யூனியன் வங்கி மனி டிரான்ஸ்பர் மூலம் பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications