மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா - ஏப். 16ல் தொடக்கம்

அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடா வருடம் நடைபெறும் முக்கிய விழா சித்திரைத் திருவிழாவாகும்.
இந்த திருவிழாவைக் காண லட்சோபம் லட்சம் பக்தர்கள் மதுரையில் குழுமுவார்கள். மதுரையே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும்.
இந்த விழாவோடு அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவும் இணைந்து நடத்தப்படுவது சைவ - வைணவ நல்லிணக்கத்தின் மிகச் சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம், ஏப்ரல் 16-ம் தேதி காலை 9.40 மணி முதல் 10.05 மணிக்குள் நடைபெறுகிறது. கோயிலில் சுவாமி சன்னதி முன் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்படுகிறது.
அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஏப்ரல் 23ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 24ம் தேதி திக் விஜயம் ஆகியவை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 26ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறும்.
திருவிழாவின் நிறைவாக ஏப்ரல் 27ம் தேதி சுவாமி, அம்மன் தேர்த்தடம் பார்க்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications