கிருஷ்ணாவில் நீர் திறப்பு- பூண்டிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பூண்டி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அந்த நீர் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். இதில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட வேண்டும்.
ஆனால் கடந்த செப்டம்பர் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. இதனால் கூடுதல் தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அதிக அளவு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.
35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் இன்று 30.93 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து 600 கனஅடி கிருஷ்ணா நீர் வருவதால் ஏரி வேகமாக நிரம்புகிறது. இங்கிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 340 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு நீர் நிலைகளில் இந்த காலகட்டத்தில் 11 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் 7 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது.
இருப்பினும் தற்போது கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருப்பதால் குடிநீர்ப் பிரச்சினை வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications