மே மாதம் வரை மின் வெட்டு தொடரும்- ஆற்காடு வீராசாமி

சென்னையில் மின்வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை இன்று அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வீராசாமி பேசுகையில், தமிழகத்தில் கிராமப்புறங்களில் தற்போது நிலவி வரும் 2 மணிநேர மின்வெட்டு மே மாதம் இறுதி வரை தொடரும்.
தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்ய அண்டை மாநிலங்களில் இருந்து 10,000 மெகாவாட் வரை மின்சாரம் பெறப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் கிராமப்புறங்களில் நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; அதிகளவில் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல்.
கிராமப்புறங்களில் தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், பகலில் மட்டுமே மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் வீராசாமி.


Click it and Unblock the Notifications
