விடுதலைப் புலிகள் அரசியல் புகலிடம் கேட்க முடியும்- இங்கிலாந்து கோர்ட்
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும.அதேசமயம், அவர்களுக்கு போர்க் குற்றத்தில் தொடர்பு இருந்தால் புகலிடம் தரக் கூடாது என்று இங்கிலாந்து கோர்ட் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் 1992 ம் ஆண்டு இணைந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அமைப்பில் பல பதவி நிலைகளை வகித்திருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வன்னியில் இருந்து காடுகள் ஊடாக கொழும்புக்கு நகர்த்தும் நகர்வுப் பிரிவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.
அத்துடன், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் பாதுகாவலராகவும், புலனாய்வுப் பிரிவின் தாக்குதல் அணியின் இரண்டாம் நிலை தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.
அவர் கடந்த 2006ம் ஆண்டு கொழும்புக்கு புலனாய்வுக்காக அனுப்பப்பட்ட போது, அவரது நடவடிக்கைகளை இலங்கை அரசு கண்காணித்தது. இதையடுத்து அவர் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார்.
அங்கு அரசியல் புகலிடம் கோரி அவர் இங்கிலாந்து கோர்ட்டில் விண்ணப்பித்தார். இந்த மனுவை ஏற்ற கோர்ட், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினராக இருப்பினும், அவர் அரசியல் தஞ்சம் கோர உரிமை உடையவராவார் என்று உத்தரவிட்டது.
அதேசமயம், சம்பந்தப்பட்ட நபர் இலங்கையில் நடைபெற்ற போரில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதால் அவர் போர்க் குற்றவாளியாகிறார். எனவே அவருக்கு அரசியல் புகலிடம் வழங்க முடியாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இவருடைய போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் இங்கிலாந்து அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியல் புகலிடம் கோர முடியும். அதேசமயம், போர்க்குற்றம் தொடர்பாக அவர்களுக்குத் தொடர்பு இருந்தால் புகலிடம் கிடைக்காது என்பதை இங்கிலாந்து கோர்ட் தெரிவித்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications