கை எலும்பு முறிவு: ராஜாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது தவறி கிழே விழுந்ததில் அவருக்கு கை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி- அனுஷா நிச்சயதார்த்த நிகழ்ச்சி, நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்காக, ஹோட்டலில் போடப்பட்டுள்ள கம்பளத்தில் முதல்வரின் துணைவி ராஜாத்தி நடந்து வந்தார்.
அப்போது திடீரென அவர் நிலை தடுமாறி, கீழே விழுந்தார். இதில், அவரது கையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்தனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications